திங்கள், 31 டிசம்பர், 2012
ஞாயிறு, 30 டிசம்பர், 2012
வியாழன், 27 டிசம்பர், 2012
வியாழன், 6 டிசம்பர், 2012
இழப்பின் உணர்வு
ஆந்தகார இருளில்
அமிழ்த்து இருக்கும் இரவு வேளை
சாவின் மணம் பிடித்து
பாய காத்திருக்கும் ஓநாயாய் காலன்
சுற்றி ஓங்கி எழும் ஓலத்துடன்
ஓர் இறப்பின் இறுதி நேரம்
கயிறுக்கும், கதறலுக்கும் இடையே
உயிரின் உணர்ச்சி போராட்டம்
கயிறின் வலிமையால்,
கட்டவிழிந்து உடல் விட்ட உயிர்
மெல்ல தன்னை சுற்றி பார்ர்கிறது
உறவுகளின் அழுகையை விட
உடல் விட்ட இந்த நிலை
பெரியதாய் தெரிகிறது
பிரபஞ்சத்தின் பல நிலைகள்
புதியதாய் தெரிகிறது
உலக வாழ்க்கையின் விடுதலை
உன்னதமாக தோன்றுகிறது
பறந்து திரிந்த உயிர் தடுக்கி விழ
விழித்து பார்க்கிறது
"ஓஹ் எல்லாம் கனவு"
உயிர் போனது கனவு என்றாலும்
உயிரோடு இருப்பது மகிழ்ச்சி என்றாலும்
ஏதோ ஓன்றை இழந்த உணர்வு எழுந்து அடக்கியது.
சுற்றி ஓங்கி எழும் ஓலத்துடன்
ஓர் இறப்பின் இறுதி நேரம்
கயிறுக்கும், கதறலுக்கும் இடையே
உயிரின் உணர்ச்சி போராட்டம்
கயிறின் வலிமையால்,
கட்டவிழிந்து உடல் விட்ட உயிர்
மெல்ல தன்னை சுற்றி பார்ர்கிறது
உறவுகளின் அழுகையை விட
உடல் விட்ட இந்த நிலை
பெரியதாய் தெரிகிறது
பிரபஞ்சத்தின் பல நிலைகள்
புதியதாய் தெரிகிறது
உலக வாழ்க்கையின் விடுதலை
உன்னதமாக தோன்றுகிறது
பறந்து திரிந்த உயிர் தடுக்கி விழ
விழித்து பார்க்கிறது
"ஓஹ் எல்லாம் கனவு"
உயிர் போனது கனவு என்றாலும்
உயிரோடு இருப்பது மகிழ்ச்சி என்றாலும்
ஏதோ ஓன்றை இழந்த உணர்வு எழுந்து அடக்கியது.
செவ்வாய், 4 டிசம்பர், 2012
புதன், 21 நவம்பர், 2012
செவ்வாய், 20 நவம்பர், 2012
செவ்வாய், 6 நவம்பர், 2012
சென்று வா எம் தகப்பனே சென்று வா
கைபிடித்து எம்மை வழி நடத்தி
உலக வாழ்க்கையை
உம் வாழ்க்கையால்
எமக்கு கற்று தந்து
வயதின் மூப்பால்
ஓய்வெடுக்க நீ
இன்று உறங்கி போனாய்
எளிய வாழ்கையிலும் மனநிறைவாய்
எந்த நேரத்திலும் நேர் வழியில்
வாழ வேண்டும் என்று சொல்லி
அந்த சொல்லாக வாழ்ந்து விட்டு
சொர்கம் சேர நீ
இன்று உறங்கி போனாய்
கண்ணே மணியே என்று எங்களை
கொஞ்சவில்லை என்றாலும்
கண்ணின் மணி போல் எங்களை
காத்து வளர்த்து, ஆளாக்கி
உன்னை படைத்த
உலக வாழ்க்கையை
உம் வாழ்க்கையால்
எமக்கு கற்று தந்து
வயதின் மூப்பால்
ஓய்வெடுக்க நீ
இன்று உறங்கி போனாய்
எளிய வாழ்கையிலும் மனநிறைவாய்
எந்த நேரத்திலும் நேர் வழியில்
வாழ வேண்டும் என்று சொல்லி
அந்த சொல்லாக வாழ்ந்து விட்டு
சொர்கம் சேர நீ
இன்று உறங்கி போனாய்
கண்ணே மணியே என்று எங்களை
கொஞ்சவில்லை என்றாலும்
கண்ணின் மணி போல் எங்களை
காத்து வளர்த்து, ஆளாக்கி
உன்னை படைத்த
கடவுளை காணும் ஆவலுடன்
கண் மூடி நீ உறங்கி போனாய்
இறைவனின் இல்லத்தில்
நீ இளைப்பாறி, எங்களை
காத்து இனியும் வழி நடத்துவீர்
என்ற நம்பிக்கையுடன் சொல்கிறோம்
சென்று வா எம் தகப்பனே
சென்று வா எம் தகப்பனே....................
கண் மூடி நீ உறங்கி போனாய்
இறைவனின் இல்லத்தில்
நீ இளைப்பாறி, எங்களை
காத்து இனியும் வழி நடத்துவீர்
என்ற நம்பிக்கையுடன் சொல்கிறோம்
சென்று வா எம் தகப்பனே
சென்று வா எம் தகப்பனே....................
வியாழன், 1 நவம்பர், 2012
வியாழன், 25 அக்டோபர், 2012
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
வியாழன், 18 அக்டோபர், 2012
புதன், 17 அக்டோபர், 2012
செவ்வாய், 16 அக்டோபர், 2012
திங்கள், 15 அக்டோபர், 2012
தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்
அன்று, தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
இறையின் வார்த்தையை
இம்மியளவும் தவறாமல்
கேட்டும், தட்டியும் எனக்கானவை
கிடைக்கவுமில்லை, திறக்கவுமில்லை
முயற்சிகள் தோற்றுபோய்
இறைவாக்கு எனக்கு மட்டும்
வெறும் வாக்காய் ஆனதை
எண்ணி ஏங்கி தவித்தேன்
தவிப்பின் தனிமையில்
தனித்த நான், என் இருப்பின்,
வெறுமையால் மருகி மயங்கினேன்
மயங்கிய என்னை உலுக்கி
எழுப்பியது ஒரு முதிர்கரம்
என் இருப்பின் நிலையை
தன் மெல்லிய குரலால்
மெதுவாய் கேட்டது
இரக்கமற்ற இந்த உலகில்
எனக்காய் கொடுக்கவும், திறக்கவும்
யாருமில்லை, எதுவுமில்லை என
வெறுப்போடு வெகுண்டு சொன்னேன்
மெல்லிய புன்னகை பூத்த முதியவர்
அனுபவம் நிறைந்த தன் குரலால்
அன்புடன் என்னை நோக்கி
இறையின் வார்த்தைகளின்
இரண்டே வரிகளை இறுக்கமாக,
பிடித்த நீ, அவரின் மூன்றம் வரிகளை
முழுவதாய் மறந்ததுயேனோ என்றார்
தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்
என்ற வாக்கும் அவருடையதுதான்
உனக்கான கதவை நீ தட்டு
உனக்கான மனிதரிடம் நீ கேள்
அன்று உனக்காக திறக்கபடும்,
கொடுக்கபடும் என உண்மை வரிகளை
உணர்ச்சியோடு சொன்னார்
உண்மையை உணர்த்த நான்
இறையிடம் மன்னிப்பு கோரி
முழு நம்பிக்கையோடு எனக்கான கதவையும்,
எனக்கான மனிதரையும் தேடினேன்,
கண்டடைந்தேன் இன்று.
ஞாயிறு, 14 அக்டோபர், 2012
சனி, 13 அக்டோபர், 2012
ஞாயிறு, 7 அக்டோபர், 2012
சனி, 6 அக்டோபர், 2012
வெள்ளி, 5 அக்டோபர், 2012
புதன், 3 அக்டோபர், 2012
திங்கள், 1 அக்டோபர், 2012
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
சனி, 29 செப்டம்பர், 2012
ஆரம்ப பாடசாலை நினைவுகள் - 1
கடந்த சில தினமாக பேஸ்புக்கில் இவரை உங்களுக்கு தெரியலாம் என்று காண்பிக்கும் பெயர்களில், என் சிறு வயது பள்ளி தோழியின் பெயரை பார்த்தேன், அவள் முகம் நினைவு இல்லை ஆனால் பெயர் மட்டும் நினைவில் இருப்பதால் அவள்தான என்றும் சரியாக தெரியவில்லை.
சரி அப்படியே பள்ளி நினைவுகளில் போய் வருவோம்
சென்னை திருவெற்றியூர் பகுதியில் இருக்கும் மெட்ராஸ் தமிழ் மிசன் பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஐந்து வயது இருக்கும்போதே என்னை பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.
இன்னைக்கு இருக்கும் மாதிரி அப்போ எல்லாம் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர் சிரமம் ஏதும் அடைய வேண்டாம். பள்ளிக்கு கொண்டு போனார்கள், தலைமை ஆசிரியர் முன் நம்ம வலது கையை தலைக்குமேல் கொண்டு சென்று இடது காதினை தொட்டால் ஆறு வயசு ஆனா ஆள என்று முதலாம் வகுப்பில் சேர்த்து கொள்வார்கள்.
அப்படி ஒருவருஷம் முன்னாடியே என்னை கொண்டு போய் சேர்த்துட்டாங்க, ஒரு கரும்பலகை, ஒரு புத்தகம், இதுதான் அன்னைக்கு ஒன்னாம் வகுப்பிற்கு தேவை.எல்லாம் வாங்கி முதல் நாள் பள்ளிக்கு போயாச்சி, பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை. தினமும் பள்ளிக்கு போய்கிட்டு இருந்தேன்.
ஒரு நாள் தேர்வு நடந்தது, ஆசிரியர் சொல்லுவதை நம் கரும்பலகையில் எழுதணும், பின்னர் அவர் பார்த்து மதிப்பெண் போடுவார், தப்பா எழுதின இரண்டு உதைபோடுவார். ஆசிரியர்கள் எல்லாருமே தாய்குலங்கள்தான். அதனால் உதை அவ்வளவு கடினமா இருக்காது.
என்னுடைய விடையை திருத்துமுன் மணி அடிக்க, எங்கள் ஆசிரியர் கிளம்பிட்டார், பள்ளியும் முடிந்துவிட்டது. எனக்கு ஒரே அழுகை, வீட்டிற்கு போனால் அப்பா என்ன சொல்லுவர் என்று பயம்.
அதே அழுகை முகத்துடன் பள்ளிக்கு வெளியே வந்தேன், என் அண்ணனும், சின்ன அக்காவும் அதே பள்ளியில்தான் படிக்கிறாங்க அப்போ, என் அழுகை முகத்தை கண்ட என் அண்ணன் என்ன விஷயம் என கேட்க, விவரத்தினை சொன்னேன்.
அவ்வளவுதானா என கேட்டு, என் பலகையை வாங்கி அவனே மதிப்பெண் போட்டான், சந்தோசமா வாங்கி வீட்டுக்கு கிளம்பினோம், வீட்டுக்கு போகும் வழியில்தான், அப்பாவின் தையல் கடை, கடைக்கு போய் என் மதிப்பெணை காட்டினேன். அதை பார்த்தவுடன் தந்தையின் முகம் மாறியது................
எதுக்கு?
தொடரும்
சனி, 22 செப்டம்பர், 2012
யேசு கிறிஸ்து
மண்ணுலக மாந்தர் எம் துயர் தீர்க்க
விண்ணிலிருந்து வந்த தேவன் அவர்
அன்பின் சின்னமாய், கருணையின் கடலாய்
மனிதவுருவெடுத்து மண்ணில் அவதரித்தார்
பாதை மாறிய தம் பாச மந்தைக்கு,
பரிவினால் வழிகாட்டும் மேய்ப்பனாய் மாறினார்
அடைக்க்கலாமின்றி அலைந்த அனாதைகளுக்கு
அன்பு, பரிவு, பாசம் காட்டி அன்னையாகினார்
மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல
என் வாழ்வு தரும் வார்த்தையாலும்
வாழ்வுண்டு எனும் வழியை காட்டிய
வள்ளலாக வாழ்ந்து காட்டினர்
பணிவிடை பெற அல்ல,
பணிவிடை செய்யவே வந்தேன்
என எளிமையின் வழி நடந்த
ஏற்றமீகு தலைவன் அவர்
இத்தனைக்கும் மேலாக, பாவக்கடலில்
தத்தளிக்கும் எம்மை கரை சேர்க்க
ஆணிகளால் அறைப்பட்டு,
சிலுவையில் ஆவித்துறந்தான் எம் இறைவன்
நம் பாவ கறை நீக்க தன் ரத்தத்தால் பாதையமைத்த
பாமரன் நம்மை பரிவோடு அழைக்கிறார்
பணிவுடன் அவர் பாதம் தொழுவோம் வாரீர்.
விண்ணிலிருந்து வந்த தேவன் அவர்
அன்பின் சின்னமாய், கருணையின் கடலாய்
மனிதவுருவெடுத்து மண்ணில் அவதரித்தார்
பாதை மாறிய தம் பாச மந்தைக்கு,
பரிவினால் வழிகாட்டும் மேய்ப்பனாய் மாறினார்
அடைக்க்கலாமின்றி அலைந்த அனாதைகளுக்கு
அன்பு, பரிவு, பாசம் காட்டி அன்னையாகினார்
மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல
என் வாழ்வு தரும் வார்த்தையாலும்
வாழ்வுண்டு எனும் வழியை காட்டிய
வள்ளலாக வாழ்ந்து காட்டினர்
பணிவிடை பெற அல்ல,
பணிவிடை செய்யவே வந்தேன்
என எளிமையின் வழி நடந்த
ஏற்றமீகு தலைவன் அவர்
இத்தனைக்கும் மேலாக, பாவக்கடலில்
தத்தளிக்கும் எம்மை கரை சேர்க்க
ஆணிகளால் அறைப்பட்டு,
சிலுவையில் ஆவித்துறந்தான் எம் இறைவன்
நம் பாவ கறை நீக்க தன் ரத்தத்தால் பாதையமைத்த
பாமரன் நம்மை பரிவோடு அழைக்கிறார்
பணிவுடன் அவர் பாதம் தொழுவோம் வாரீர்.
வெள்ளி, 21 செப்டம்பர், 2012
திங்கள், 17 செப்டம்பர், 2012
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
கேள்வி
நீ என்னை நேசிக்கிறாய?
இந்த கேள்வி ஒவ்வொரு முறையும்
என்னை நோக்கி, உன்னால் எழுப்பபடும் போது
என் உணர்வுகளை சொல்ல வார்த்தை இன்றி
உடைந்து போகிறேன்
இதயத்தினை திறந்து
அதில் உன் இருப்பை காட்ட
நான் அனுமனும் அல்ல
மூச்சுக்கு முன்னுறு முறை
உன்னை வர்னித்து கவிதை எழுத
நான் கவிஞசனும் அல்ல
வார்த்தையால் வலி உண்டாக்கியபின்
மன்னிப்பு என்ற மருத்திடுவது
உனக்கு வாடிக்கையாகவும்
வேடிக்கையாகவும் இருக்கலாம்
வார்த்தையால் என்னால் வரையறுக்க முடியாது
உன் மீது இருக்கும் என் நேசத்தை
சுவாசிப்பதை என்று நிறுத்துவேனோ
அன்று உன்னை நேசிப்பதையும் நிறுத்துவேன்
கேள்விகள் நிறைந்ததுதான் காதல்
ஆனால் காதலே கேள்வியானால்
கண்ணீரும், காயமே பதிலாகும்.
இந்த கேள்வி ஒவ்வொரு முறையும்
என்னை நோக்கி, உன்னால் எழுப்பபடும் போது
என் உணர்வுகளை சொல்ல வார்த்தை இன்றி
உடைந்து போகிறேன்
இதயத்தினை திறந்து
அதில் உன் இருப்பை காட்ட
நான் அனுமனும் அல்ல
மூச்சுக்கு முன்னுறு முறை
உன்னை வர்னித்து கவிதை எழுத
நான் கவிஞசனும் அல்ல
வார்த்தையால் வலி உண்டாக்கியபின்
மன்னிப்பு என்ற மருத்திடுவது
உனக்கு வாடிக்கையாகவும்
வேடிக்கையாகவும் இருக்கலாம்
வார்த்தையால் என்னால் வரையறுக்க முடியாது
உன் மீது இருக்கும் என் நேசத்தை
சுவாசிப்பதை என்று நிறுத்துவேனோ
அன்று உன்னை நேசிப்பதையும் நிறுத்துவேன்
கேள்விகள் நிறைந்ததுதான் காதல்
ஆனால் காதலே கேள்வியானால்
கண்ணீரும், காயமே பதிலாகும்.
ஞாயிறு, 2 செப்டம்பர், 2012
"அன்பே சிவம்"
அடியும், முடியும் அளக்கமுடியா திருவுருவே
ஓம் என்ற பிரனவமந்திரத்தின் கருவுருவே
அழித்தலின் கடமையில் உலகின்,
தீமைகள் கருவறுக்கும் இறைவனே
மூலவன், எம் மூத்தவனின் உருப்பொருளே
லிங்கமாய் உருவெடுத்து,
கங்கைக்கு இடம் கொடுத்து
பித்தா பிறைசூடி பெருமானே என
உன் பக்தன் பாட்டு இசைக்க
பாதை காட்டிய பரம்பொருளே
இத்தனை சொல்லி, எம் பெருமானே, ஈசனே,
உன்னை நான் அறிந்ததைவிட
"அன்பே சிவம்" என்ற அரும்சொல்லல்
உன்னை புரிந்தேன், உணர்ந்தேன்.
”ஓம் நமச்சிவாய போற்றி, நாதன் தாள் போற்றி”
ஞாயிறு, 24 ஜூன், 2012
மீண்டும் ஒரு மனித தவறால் மரித்து போன
மலர் மஹிக்கு, என் கண்ணீர் அஞ்சலி
*********************************************
மலர் மஹிக்கு, என் கண்ணீர் அஞ்சலி
*********************************************
மலரே மஹி
சில மனித மிருங்களின்
மதி கெட்ட மறதியால்
இந்த பூமியில் உதித்து
மலரும் முன் உதிர்ந்து போனாய்
படுங்குழியில் நீ பட்ட வேதனைகள்
ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாத வடுவாய்
உன்னை பெற்றவர்களுக்கு மட்டும்மல்ல
எங்களுக்கும் நிலைத்திருக்கும்
உடல் துறந்து உலகம் விட்டு சென்ற மெல்லிய பூவே,
மண்ணில் நீ புதைக்கப்பட்டாலும்,எங்கள் நெஞ்சில்,
உன் நிணைவுகளை விதைத்து விட்டு சென்றுவிட்டாய்
தீரா ரணத்துடன் உன் ஆன்மா சாந்தியடையவும்
உம் பெற்றோர், உற்றோர் ஆறுதல் அடையும்
விழி நிறைந்த கண்ணீருடன் வேண்டுகிறோம்
இறைவனின் இல்லத்தில்
இளைப்பாறிக் கொண்டு இருப்பாய்
என இதயம் நிறை நம்பிக்கையுடன்
விடைக்கொடுக்கிறோம்
சென்று வா சிறுமலரே
சனி, 23 ஜூன், 2012
நினைவு பயணம்.
நினைவுகளால் நெடுதூர பயணம்
காலம், நேரம் என கணக்கு பார்க்காமல்
காலதேவனின் தேரில் ஏறி செல்கிறேன்
இதோ முடிந்துவிடும் என நினைக்கும் நேரத்தில்
இன்னொமொரு நினைவு மைல்கல்லின்,
காத்திருப்பு நினைவு வர மீண்டும் தொடர்கிறது பயணம்
முடிவில்லா இந்த நினைவு பயணத்தில்
முதல் புள்ளியாய் உன் நினைவை சுமந்து சென்றவன்
முற்றுப்புள்ளியாய் இருக்கும் உன் வருகையை எண்ணி, எண்ணி வயதாகிப்போனேன்.
முற்றுப்புள்ளிக்காய் காத்திருந்தவன்
முதுமை நரை கொண்டு, முகம் சுருங்கி,
கால தேவனின் தேரில் இருந்து
காலனின் தேருக்கு மாறும் காலம் ஆகிவிட்டது
முடிவில்லா இந்த பயணத்தில்
என் மூச்சு அடங்கும் முன்
முழு நிலவே உன் முகம் காட்டிடு
நினைவு சிறகுகளல் வருடப்பட்டு
மீண்டும் புது மனிதானய் பிறந்திடுவேன்.
கனவு......................
நெடும் கனவில் உன் விரல் பிடித்து
கடற்கரை மணலில் கால் பதித்து நிற்கிறேன்
வீசும் காற்றுக்கு வீணை மீட்டி
என் மூச்சு காற்றும்,
உன் மூச்சு காற்றும் பேசிக்கொள்ள ,
இணைய முடியா இருப்பில்
நம் இரு உதடுகளும் துடிக்க
இவற்றின் நிலையால் என் உடலில்
ஏற்படும் சில ரசாயண மாற்றத்தை
நான் விழி மூடி ரசிக்கும்,
ஒரு இனிய தருணம்
இடைவெளியின்றி நடந்தது
பின், மெல்ல விழி திறந்து பார்க்கிறேன்
விழி மூடி இருந்த என்னை
விழி அசையாமல் ரசிக்கும்
உன்னை கண்டேன்
விழி மூடி ரசித்த என் அனுபவம் பெரியதா,
இல்லை, விழி அசையா என்னை ரசித்த,
உன் ரசனையின் அனுபவம் பெரியாதா,
என்ற கேள்வியுடன்
தொடர்கிறது மீண்டும் கனவு
திங்கள், 28 மே, 2012
உயிரினில் கலந்த உறவே
அளக்க
முடியா உன்
அன்பின் எல்லைகளை
எப்படியாவது இந்த உலகிற்க்கு
அளந்து காட்ட வேண்டும் என்ற
அளவில்லா ஆசையால்
அளந்து பார்க்கிறேன்
என் இதயம் என்னும்
அளவு கோலால்
இதயத்தின் அளவுகோலால்
எடுக்கப்பட்ட அளவின் அலகு இது
இலக்கு நோக்கி செல்லும்
என் இந்த இடைவிடா பயணத்தில்
இடையில் நான் இளைப்பாற
இறைவன் தந்த ஒரு இருப்பிடம் நீ
சில புறகணிப்பால்
நான் புறந்தள்ளப்பட்டு
புழுதியாய் கிடந்த போது
என்னை தழுவி எடுத்து
தங்கமாக்கிய தாரகை நீ
சில உணர்சிகளால்
உருமாற இருந்த என்னை
உன் உணர்வுகளால்
உயிர் கொடுத்து
உயர்ந்தவனாகிய
உன்னதமானவள் நீ
அன்பே, என் ஆருயிரே
அளக்க, அளக்க
உன் அன்பினால்
அயர்ந்து போனேன்
உன் இத்தனை அன்புக்கு நான்
அருகதை உள்ளவான என
என் விழி நீரால் அமிழ்ந்தும் போனேன்
அன்பின் எல்லைகளை
எப்படியாவது இந்த உலகிற்க்கு
அளந்து காட்ட வேண்டும் என்ற
அளவில்லா ஆசையால்
அளந்து பார்க்கிறேன்
என் இதயம் என்னும்
அளவு கோலால்
இதயத்தின் அளவுகோலால்
எடுக்கப்பட்ட அளவின் அலகு இது
இலக்கு நோக்கி செல்லும்
என் இந்த இடைவிடா பயணத்தில்
இடையில் நான் இளைப்பாற
இறைவன் தந்த ஒரு இருப்பிடம் நீ
சில புறகணிப்பால்
நான் புறந்தள்ளப்பட்டு
புழுதியாய் கிடந்த போது
என்னை தழுவி எடுத்து
தங்கமாக்கிய தாரகை நீ
சில உணர்சிகளால்
உருமாற இருந்த என்னை
உன் உணர்வுகளால்
உயிர் கொடுத்து
உயர்ந்தவனாகிய
உன்னதமானவள் நீ
அன்பே, என் ஆருயிரே
அளக்க, அளக்க
உன் அன்பினால்
அயர்ந்து போனேன்
உன் இத்தனை அன்புக்கு நான்
அருகதை உள்ளவான என
என் விழி நீரால் அமிழ்ந்தும் போனேன்
புதன், 16 மே, 2012
மன்னிப்பாயா, என்னை நீ மன்னிப்பாயா
என் வார்த்தை வாளின்
தீண்டுதலால் நீ வாடி துடித்தபோது
நீ அடைந்த வலியை விட
நான் துடித்த வலி அதிகம்
இதயத்தில் இருப்பவர்களின்
வாயில் இருந்து இடறி விழும்
ஒரு வார்த்தையும்,
சீறும் பாம்பை விட
சீற்றம் கொண்டது என
நீ இதயம் சிதைந்து தீண்டுதலால் நீ வாடி துடித்தபோது
நீ அடைந்த வலியை விட
நான் துடித்த வலி அதிகம்
இதயத்தில் இருப்பவர்களின்
வாயில் இருந்து இடறி விழும்
ஒரு வார்த்தையும்,
சீறும் பாம்பை விட
சீற்றம் கொண்டது என
அழுதபோது புரிந்தது
இதயத்தில் இருக்கும் என்னுயிரே
புரிதலின் சிறு பிழையால்,
உன் இதயத்தில் நுழைந்த
என் வார்த்தையால்
நீ துடித்த துடிப்பு கண்டு
விழி கலங்கி, உயிர் துடிக்க நிற்கிறேன்
மன்னிப்பு என்ற வார்தையால்
உனக்கு மருந்திட முடியாது
என்று தெரிந்தாலும்
மனம் கலங்கி கேட்கிறேன்
வியாழன், 15 மார்ச், 2012
பிள்ளையார் சுழி
ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்
உள்ளடக்க உருப்பொருளாம் உன் எழுத்து, உலகவாழ் அனைத்துயிர்க்கும்
இது ஒரு தனியெழுத்து
படைத்தல், காத்தல், அழித்தல் என
இடைவிடா நடக்கும் இறைசெயலில்
காத்தலின் கருப்பொருளாம் உன் எழுத்து
உள்ளடக்க உருப்பொருளாம் உன் எழுத்து, உலகவாழ் அனைத்துயிர்க்கும்
இது ஒரு தனியெழுத்து
படைத்தல், காத்தல், அழித்தல் என
இடைவிடா நடக்கும் இறைசெயலில்
காத்தலின் கருப்பொருளாம் உன் எழுத்து
தமிழ் மொழியின் உயிரெழுத்தில்
ஐந்தாம் நிலையாம் இவ்வெழுத்து ,
ஆனால் அழகு தமிழ் அனைத்திற்க்கும்
இதுவே முதலெழுத்து
முதலெழுத்தின் மூலப்பொருளே,
மூத்தவனே, அப்பா கணேசா
அன்னை தமிழில் அழகுற எழுத
உன் சுழியால் தொடங்கிவிட்டேன்
பிழையின்றி எழுதிடவே
நீ துணையாக வேணும்ப்பா
ஐந்தாம் நிலையாம் இவ்வெழுத்து ,
ஆனால் அழகு தமிழ் அனைத்திற்க்கும்
இதுவே முதலெழுத்து
முதலெழுத்தின் மூலப்பொருளே,
மூத்தவனே, அப்பா கணேசா
அன்னை தமிழில் அழகுற எழுத
உன் சுழியால் தொடங்கிவிட்டேன்
பிழையின்றி எழுதிடவே
நீ துணையாக வேணும்ப்பா
திங்கள், 27 பிப்ரவரி, 2012
விடை தெரியா கேள்வி
அரியதாய் கிடைத்த ஒரு ஒய்வு நாள்
ஒரு கடற்கரையோரம்
அலையில்ல கடல் போல்
அமைதியாய் அமர்ந்திருந்தேன்
உலர்ந்து கிடக்கும் சருகினை
ஊதிக்கிளப்பும் காற்றினைப் போல்
அங்கே கடந்து போன காதல்(ர்)கள்
என்னை என் கடந்த கால
நினைவுக்கு கடத்தி செல்ல
மனதில் மறைந்து இருந்த
அவளின் நினைவுகள்,
மலர்கள் மலர்வதுப்போல்
என் நினைவில் மலர்ந்தது
இதே கடற்கரையோரம்
கரம் கோர்த்து, காதல் கதைப்பேசி
நாங்கள் பதித்து சென்ற
பாத சுவடுகள் பல்லாயிரம்
மூச்சுக்கு முன்னுறு முறை
என்னுடன் வாழப்போகும்
வாழ்கையை வண்ண வண்ண
ஓவியம் போல், வார்த்தையால்
வரைந்துக் காட்டுவாள்
கடற்கரை மணலில் வீடு கட்டி,
பேச்சினால் நாங்கள் வாழ்ந்த வாழ்கையில்
மக்கள் செல்வம் இரண்டோடு
பேரனும், பேத்தியும் உண்டு
அலையடித்து சிதைந்த
எம் மணல் வீடு போல்
காலம் என் காதலை சிதைத்தது
இணைபிரியா நடந்த எம் கால்கள்
சில இரும்பு கரத்தால்
திசைக்கு ஒன்றாக விலக்கப்பட்ட
இதோ இங்கே நானும், எங்கோ அவளும்
நினைவுகளின் மீட்சியால் விழி நனைய,
மனதில், எங்கோ ஒரு கடற்கரையோரம்,
அவளும் இதே நிலையில் இருப்பாளோ
எனும் விடை தெரியா கேள்வி எழ,
விழித்துடைத்து நடக்கிறேன்.
புதன், 1 பிப்ரவரி, 2012
வல்லமை பொங்கல் சிறப்பிதழில் நான் எழுதிய கவிதை
மனம் எனும் மாயப்பெட்டகம்
கண்ணில் தெரியா மனித மனதில் இறைவனும் எண்ணி, எண்ணித் தோற்றஎண்ண முடியா எத்தனை ரகசிய அறைகள்
எண்ண முடியா ரகசிய அறையில்
பொத்தி வைத்துப் பூதம் காப்பதுபோல்
மறைத்து வைத்த எத்தனை எண்ணங்கள்
எண்ணங்களை எண்ணிக்கைப் படுத்த
இயன்றவரை முயலுவோம் என
எடுத்து வைத்தேன் ஏடு ஒன்றை.
வகைக்கு ஒன்றாக
வலம் வந்தவை இதோ,
பொறாமைத் தீயினால் பொசுங்கிப் போய்
மற்றவரை ஆள முடியா ஆற்றாமையால்,
அழுது புலம்பும் அழுக்கானவை.
நட்பின் நம்பிக்கையை நசுக்கிப் பார்க்கும்
நல்லிதயம் இல்லா நாற்றம் கொண்டவை
மூர்க்கத்தினை மட்டுமே மூளையில் கொண்ட
முடமான குணம் கொண்டவை.
அகத்தில் வெறுத்து, புறத்தில் சிரிக்கும்
புதை மணலின் நிலை கொண்டவை
அழுக்காறு கொண்டு புறம் பேசும்
நச்சுப் பாம்பின் பிரதிபிம்பங்கள் .
வகைக்கு ஒன்றாய் வலம் வந்த பின்
மனம் எனும் மாயப் பெட்டகம், தன்னுள்,
பொதித்து வைத்த பொதி மூட்டையில்,
மெல்ல எட்டி நான் பார்க்க,
அதில் சீறும் புலியின் சீற்றத்துடன்
தன் இருப்பை நிலை நிறுத்தும்
இடைவிடாப் போராட்டத்தில்
இருந்தது நல்லெண்ணம்
இத்தனை நச்சுப் பொதிகையில் நடுவே
நீ இருந்தும், மூழ்காமல் முழுமையாய்
இருக்கும் சாத்தியம் எப்படி எனும்
ஐயப்பாட்டினை அதனிடம் கேட்க
அதற்கு மறுமொழியாக
மனித மனம் எல்லாவற்றிலும்
இணை பிரியா இருப்பு நான்
மனங்களில் என் இருப்பின் அளவில்
ஏற்றத் தாழ்வுகள் இருக்குமே தவிர
இருப்பில்லா நிலைக்கு என்றுமே
நான் இருந்ததில்லை
பல நச்சு எண்ணங்களால்
மூச்சுத் திணறும் சில முழு மனதும்,
உயிர் மூச்சுப் பெறுவது இதனால்தான் என
விடை சொல்லி எனக்கு விடை கொடுக்க
இறைவனின் படைப்பில் இப்படியும்
ஒரு நிகழ்வு இருப்பதனால்தான், மனிதம்
இன்னமும் மறையாது இருக்கிறது
எண்ணத்துடன் எடுத்து வைத்தேன் என் ஏட்டினை.
http://www.vallamai.com/
செவ்வாய், 24 ஜனவரி, 2012
விடுமுறை காலம்
நேர முள்ளின் வேக நகர்தலில்
கையில் வைத்த பனிகட்டியாய்
கரைந்தே போனதே, உறவுகளை காணும்
என் விடுமுறை பயணம்
உறவுகளை காணும் உற்சாகத்துடன்
உடன் கூடி வந்த என் கைப்பைகளும்
திரும்பி செல்லும் நாள் நெருங்கி
நெருக்குவதை கண்டு, கலக்கமாய்
நெருக்குவதை கண்டு, கலக்கமாய்
காலத்தின் ஓட்டத்தினை கட்டி வைக்க,
கயிறு ஒன்று கிடைக்குமா என
தமக்குள் பேசி, பேசி தவித்து போனது
விடுப்பின் காலம் விடை பெற,
கனத்த மனதுடன் திரும்பி
களைத்து வந்த எம்மை கண்டு,
எடுத்து செல்லும் பொருளின்
எடை அளவு கூடியதால், நான்
விடுத்து சென்ற
மிட்டாய் பெட்டிகள்,
அங்காடியில் எம்மை வாங்கியபோது
உம் உறவுகளை மகிழ்விக்கும்
உரிய பொருள் நாங்கள் என
மகிழ்சியோடு காத்திருந்தோம்,
நீர் காணும் உறவுகளை எல்லாம் நாங்களும் கண்டு
மகிழ்ந்து, மகிழ்விக்க இருந்த எம்மை ஏமாற்றி
இப்படி இருட்டு மூலையில் இருத்தி சென்றது
என்ன நியாயம் என வினாவுடன் விசும்ப
அங்காடியில் எம்மை வாங்கியபோது
உம் உறவுகளை மகிழ்விக்கும்
உரிய பொருள் நாங்கள் என
மகிழ்சியோடு காத்திருந்தோம்,
நீர் காணும் உறவுகளை எல்லாம் நாங்களும் கண்டு
மகிழ்ந்து, மகிழ்விக்க இருந்த எம்மை ஏமாற்றி
இப்படி இருட்டு மூலையில் இருத்தி சென்றது
என்ன நியாயம் என வினாவுடன் விசும்ப
உறவுகளை கண்டு வந்த எமக்கே
இத்தனை கவலையென்றால்
காணாமல் இருக்கும் அவற்றின்
வேதனை எப்படி இருக்கும் என தெரிய
அவற்றின் கவலை தீர்க்கும் பதிலாய்
காத்திருங்கள், காலம் மீண்டும்,
உறவுகளை காண செய்யும் என்னும்
ஆறுதல் வார்த்தை சொல்லி,
அவற்றோடு சேர்ந்து,
உறவுகளை மீண்டும் காணும்
உன்னத நாளிற்க்காய் உவப்புடன்
நானும் காத்திருக்கிறேன்.
முகமூடி
நல்மனித இயல்பை நசுக்கி
என் இருப்பை தொலைத்த எனக்கு
ஊர் முன் உத்தமனாக நடிக்க வேண்டி ,
காலத்தால் எனக்கு ஒரு கட்டாயம் வந்தது
அதனால்,
அகத்தின் அழுக்கை, என் முகத்திரை
முத்திரையிட்டு காட்ட வண்ணம் என் இருப்பை தொலைத்த எனக்கு
ஊர் முன் உத்தமனாக நடிக்க வேண்டி ,
காலத்தால் எனக்கு ஒரு கட்டாயம் வந்தது
அதனால்,
அகத்தின் அழுக்கை, என் முகத்திரை
மூடி மறைத்திடமுனைப்புடன்,
தேடினேன் ஒரு முகமூடி
உண்மையற்ற வார்த்தைகள் பேசி
உவர்த்து போன என் வாயினை
உண்மையின் உறைவிடமாக்கி உலகிற்கு,
காட்ட உடனே வேண்டும் ஒரு முகமூடி
உவர்த்து போன என் வாயினை
உண்மையின் உறைவிடமாக்கி உலகிற்கு,
காட்ட உடனே வேண்டும் ஒரு முகமூடி
கெட்டதை மட்டும் நோக்கி கெட்டழிந்த,
என் கண்களை, கண்ணியம் நிறைந்து
கனிவு காட்டும் கண்களாக காட்டிட
கடினமாய் தேடினேன் ஒரு முகமூடி
இன்சொல் கேட்க மறுத்து
மரத்துப்போன என் காதுகளை
எம் மாந்தருக்கு மாற்றி காட்ட
மறைவாய் தேடினேன் ஒரு முகமூடி
மூர்க்கமுடன் தேடியும் மூகமுடிகள்
கிடைக்காத நிலை, என்ன செய்வது,
ஏது செய்வது, ஏதும் புரியாமல்
குழம்பி போய், குறுகி கிடந்த சமயம்
உண்மையின் வெளிச்சம்,
என்னில் ஒளிவிட தொடங்கியது
பொய்மையின் பின்னால் போனால்
பல நூறு முகம் வேண்டும், ஆனால்
உண்மை பாதையில் உவப்புடன் நடக்க
எனக்கு ஒரு முகமே போதும் என்று
எண்ணத்தில் எழுந்த மாற்றத்தால்
நடிப்பிற்கு நல்லவனாக இருப்பதை தவிர்த்து,
முகமூடி தேடும் என் முட்டாள்,
பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து
எண்ணம், செயல், அனைத்திலும்
உண்மை மனிதனாக மாற
உவகையுடன் தொடங்கினேன்
என் புது முயற்சியினை................
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

















.jpg)





















