ஞாயிறு, 27 நவம்பர், 2011

காதல் காலம்

வாழ்வை இணைத்து செல்லும் காதலை
இதயம் இனிக்க சொன்னாய்
நனைத்து செல்லும் மழையிலே
நனையாமல் இருந்தது உன் காதல்

காலில் ஒட்டி உறுத்தும் மணல் போல்
உன் சிறு பிரிவு என்னை வருத்தினாலும்
கொளுத்தும் வெயிலில் கிடைக்கும் சிறு நிழல் போல
அழுத்தமாய் அன்று நீ கொடுத்த முத்ததின் நினைவு
பதிகமாய் பதிந்து பரவசமுட்டுது.

முத்தம் காதலில் முத்திரை
முத்திரையற்ற பத்திரம்
செல்லாததுப் போல்
இதழ் முத்தியரையற்ற காதல்
முழுக் காதல் ஆகாது

சேர்ந்துவிடும் ஆசையுடன்
சேகரிக்கும் கனவுகள் எல்லாம்
காலத்தால் கலைந்து விடமால் காக்க 
காதலால் செய்த ஒரு காலப் பாத்திரம்
இதயம் என்ற இன்னொரு பெயராலும் அழைக்கபடும்

எப்ப வரப் போற மாமா

”ஆடி அசையும் தோரணமும்
கூடி கூலாவும் கோபுர புறாக்களும்
துள்ளட்டம் போட செய்யும்
இசையோடு மேள தாளமும்

ஆனந்தமாய் அலறும் குரலோடு
வட்டமாய் சுத்தும் குடை ராட்டினம்
கட்டி இழுக்கும் காந்த குரலால்
தட்டியழைக்கும் ஒலிபெருக்கி விளம்பரம்

பாசக்குரலில் பெயரை சொல்லி
உறவின் பெருமைகளை உரையாடி
பரிவன்பை பஞ்சமின்றி அள்ளி தரும்
பாசங்கில்லா அன்புக் கூட்டமும்

இத்தனையும் நிறைஞ்சியிருந்தும் திருவிழா
நிறைக்கவில்லை மாமா என் மனசை
பாலை மணலின் கொத்தி எடுக்கும் சூட்டோட
நம்ம குடுமபத்தை நிலை நிறுத்த

தனிமையே துணையாக, தவிப்பே உணர்வாக
நிலை கொண்ட உன் இருப்பு, நித்தமும்
என் நெஞ்சை சுத்தி சுத்தி வந்து நிற்க
நம்மை சுத்தியடிச்ச கால சூறாவெளியில்

நான் சுருண்டு போன காகிதமா
கத்தியழ சக்தியின்றி தவிச்சி இருக்கேன்
கண்ணீரோட கொட்டியழ கோடியுண்டு
ஒரு எட்டு  வெச்சி நீயும் வந்த

குளிர்ந்து போகும் எம் மனசு
குறை தீர்க்க வேணுமின்னு
குலச் சாமி கோவிலுக்கு
ஏத்தி வெச்சேன் மாவிளக்கு

எப்ப வர போற மாமா, நீ எப்ப வர போற”

நட்புறவுகள்

தகிக்கும் உறவு சூரியனின்
பொசுக்கும் கோபக் கதிர்களால்
கடக்க வேண்டிய பயணம்

நடை தளர்ந்து தடுமாறி
நடுக்கமுடன் உரத்துக் குரலில்
ஓங்கி அழுது,  நா உலர்ந்து நடக்கிறேன்

சற்றே தொலைவில்
நட்பு விதை தூவி

நம்பிக்கை நிழல் காட்டி
 

அன்பு விழுது சூழ 
ஆலமர நிழலாய்
நட்புறவு நிற்க்கிறது

உருக்குலைந்து 

நிலை தொலைத்த 
நடைப்பிணமென்னை 

தன் நேசக்காற்றால் 
உயிர் மூச்சு கொடுத்து

வாரி அனைத்து வாட்டம் போக்கி
வலிமை கொடுத்தது

உயிர்க் கொடுத்த நட்புறவின் 
உரம் கொடுக்கும் வார்த்தைகளால்
இனி கடக்க வேண்டிய தூரமும் 
மலைக்கவில்லை எனக்கு 

அன்னைக்கு ஒரு தினம்

”அன்னைக்கு ஒரு தினம் என
ஆர்ப்பரிந்து ஆராவரம்
செய்ததாம் அகில உலகம்
ஹாப்பி மதர்ஸ் டே
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் என
அடையாளம் காட்டியதாம்
ஆயிரம் மொழியால் தன் அன்பை
நாளின் அடையாளத்துக்கு உரியவளே
அழகாய் புன்னகைத்து
அமைதியாய் தன் பணி செய்ய
அப்பொழுதுதான் புரிந்தது எனக்கு
ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும்
அன்னையர் தினம் இல்லை
அவள் அன்பினால் ஆண்டு முழுவதும்
அவள் தினமே என்று”

குளிர் நிலா

”யாருமில்ல தனிமை பயணத்தில்
நிழல்கூட துணையின்றி
இருள் சூழ நான் நடந்தேன்
தனிமை தாகத்தில் நான் தவித்து இருக்க
குளிர் நிலவாய் நீ வந்தாய்
துணையாக நீ வந்து
துயர் துடைப்பாய் என்றிருக்க
முகம் காட்டி மறையும்
என் காதலியைப்போல்
மேக துணி மூடி மறைந்தாயோ
என் தளிர் நிலவே”

மன அழுக்கு

”புளுகிய மனம் புலம்பி தவிக்குது
புறம் சொல்லியே தன் நாட்களை கழிக்குது
இருள் சூழும் நிலைக்கு, இறுக்கி அடைத்த
தன் இரண்டு கண்களே என்று புரியாமல்
கறைப்படிந்த கைகளால் கைக்கொட்டி சிரிக்குது”

இறைவன் இருக்கிறானா?

”இறைவன் இருக்கிறான, இல்லையா
வாதப் பிரதிவாதிகளின்
வாதத்தால் வார்த்தை தடித்தது.
 

சூழ்நிலையின் நெருப்பு கண்டு
சுற்றத்தார் சூட்சகமாய் வாதத்தினை நிறுத்த
இறை இருப்பை நிலை நிறுத்த முடியா
இயலாமையுடன் விலகிப்போனான் வாதி
 

புறப்பட்டவன் தன் வருத்த குரலால்
ஆண்டவன் எனக்கு எழுதிய
இன்றைய நாளின் எழுத்து
கோணலாகிப் போனதின் கோலமே
இது எனக் கூறி சென்றான்

கூறியவன் குரல் கேட்ட பிரதிவாதி
இறை மறுப்பு வாதத்தை இடுக்கில் தள்ளிவிட்டு
இறை எழுத்தின் இருப்பை எள்ளி நகையாடினான்

தன் எழுத்தை நிருப்பிக்க
இறைவன்  
தனி ஒரு பிறவி எடுப்பானா என
தவிர்க்க முடியா ஒரு கேள்வியுடன்
தனித்து நின்றேன் நான்

எள்ளி நகையாடிய எக்காலக் குரலை
 
தம் இனிய குரலால் இடைமறித்து
இளம் மழலை கூட்டம் ஒன்று
ஆடிப் பாடி அங்கே வந்தது

கூடி நின்ற கூட்டத்தை தம் குளிர்
பார்வையால் கட்டி இழுத்து
தளிர் கரத்தால் அருகிருந்த சுவற்றில்
கிறுக்கல் எழுத்துகளை பதிக்க தொடங்கியது

மழலைகள் கிறுக்கலை கண்டு
நிலை மறந்து மலைத்து நின்றான்
இறை எழுத்தின் இருப்பை கேட்டவன்

இனியேனும் அவனுக்கு புரிந்திருக்குமோ
தன் எழுத்தை நிருப்பிக்க
தனி ஒரு பிறவி தேவையில்லை

தளிர் நடை போடும் குளிர் நிலவுகள்
அனைத்திலும் தான் இருப்பேன் என
இறைவன் சொல்லாமல் சொல்லுவதை”