வியாழன், 15 மார்ச், 2012

பிள்ளையார் சுழி

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்
உள்ளடக்க உருப்பொருளாம் உன் எழுத்து,
உலகவாழ் அனைத்துயிர்க்கும்  
இது ஒரு தனியெழுத்து

படைத்தல், காத்தல், அழித்தல் என
இடைவிடா நடக்கும் இறைசெயலில்    
காத்தலின் கருப்பொருளாம் உன் எழுத்து

தமிழ் மொழியின் உயிரெழுத்தில்
ஐந்தாம் நிலையாம் இவ்வெழுத்து ,
ஆனால் அழகு தமிழ் அனைத்திற்க்கும்
இதுவே முதலெழுத்து

முதலெழுத்தின் மூலப்பொருளே,
மூத்தவனே,  அப்பா கணேசா
அன்னை தமிழில் அழகுற எழுத
உன் சுழியால் தொடங்கிவிட்டேன்
பிழையின்றி எழுதிடவே
நீ துணையாக வேணும்ப்பா

கருத்துகள் இல்லை: