ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

"அன்பே சிவம்"


அடியும், முடியும் அளக்கமுடியா திருவுருவே 
ஓம் என்ற பிரனவமந்திரத்தின் கருவுருவே 
அழித்தலின் கடமையில் உலகின், 
தீமைகள் கருவறுக்கும் இறைவனே
மூலவன், எம் மூத்தவனின் உருப்பொருளே 
லிங்கமாய் உருவெடுத்து, 
கங்கைக்கு இடம் கொடுத்து
பித்தா பிறைசூடி பெருமானே என 
உன் பக்தன் பாட்டு இசைக்க 
பாதை காட்டிய பரம்பொருளே 
இத்தனை சொல்லி, எம் பெருமானே, ஈசனே,
உன்னை நான் அறிந்ததைவிட 
"அன்பே சிவம்" என்ற அரும்சொல்லல் 
உன்னை புரிந்தேன், உணர்ந்தேன்.

”ஓம் நமச்சிவாய போற்றி, நாதன் தாள் போற்றி”

கருத்துகள் இல்லை: