சனி, 23 ஜூன், 2012

நினைவு பயணம்.






நினைவுகளால் நெடுதூர பயணம்
காலம், நேரம் என கணக்கு பார்க்காமல்
காலதேவனின் தேரில் ஏறி செல்கிறேன்

இதோ முடிந்துவிடும் என நினைக்கும் நேரத்தில்
இன்னொமொரு நினைவு மைல்கல்லின்,
காத்திருப்பு நினைவு வர மீண்டும் தொடர்கிறது பயணம்

முடிவில்லா இந்த நினைவு பயணத்தில்
முதல் புள்ளியாய் உன் நினைவை சுமந்து சென்றவன்
முற்றுப்புள்ளியாய் இருக்கும் உன் வருகையை எண்ணி, எண்ணி வயதாகிப்போனேன்.

முற்றுப்புள்ளிக்காய் காத்திருந்தவன்
முதுமை நரை கொண்டு, முகம் சுருங்கி,
கால தேவனின் தேரில் இருந்து
காலனின் தேருக்கு மாறும் காலம் ஆகிவிட்டது

முடிவில்லா இந்த பயணத்தில்
என் மூச்சு அடங்கும் முன்
முழு நிலவே உன் முகம் காட்டிடு
நினைவு சிறகுகளல் வருடப்பட்டு
மீண்டும் புது மனிதானய் பிறந்திடுவேன்.

1 கருத்து:

சசிகலா சொன்னது…

முதல் புள்ளி ஏன் முற்றுப்புள்ளியாக வேண்டும். தொடர் புள்ளியாகட்டும் வரிகள் சிறப்பு.